Oktober 8, 2024

வயோதிப பெண்ணுக்கு இராணுவ வீடு கட்டி கொடுத்ததாம்

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியில் முதியவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது.

ஜே/263 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வயோதிப் பெண் தனது பேரப்பிள்ளையுடன் வசித்து வருகின்றார். அவருக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு கோப்பாய் பிரதேச செயலகத்தால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விடயம் இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் நுகேகொடை பகுதியைச் சேர்ந்த துஷாரா தேனுவர என்ற பெண் வீட்டினை அமைத்து வழங்க முன் வந்திருந்தார்.

இராணுவத்தின் ஒத்துழைப்புடன் கட்டிமுடிக்கப்பட்ட வீட்டினை தனது பிறந்த தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) அந்தப் பெண் கையளித்தார்.