கூட்டமைப்பினர் உட்பட 200 பேர் மஹிந்தவிடம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த கலைக்கப்பட்ட நாடாளுமன்றின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (4) தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்று வருகின்றது.

இந்தக் கூட்டத்தை கேவிபி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.

இந்நிலையில் இன்றைய கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட உட்பட 200 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.