கோத்தாவின் தேர்தல் ஏற்பாடுகள் பிசுபிசுக்கின்றன?

தேர்தல் ஒன்றினை நடத்த ஏதுவாக இயல்பு நிpலை திரும்புவதாக காண்பிக்க இலங்கை அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் தோல்வியில் முடிந்தே வருகின்றது.
அவ்வகையில் எதிர்வரும் 11ம் திகதி பாடசாலைகளை திறக்கும் முயற்சியும் பிசுபிசுத்துள்ளது.
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திகதி குறித்து சரியான தீர்மானம் எடுக்கப்படவில்லையென, அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஜூன் 16 ஆம்  திகதி வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மே மாதம் 11 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகுமென, அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ள போதிலும், குறித்த தினத்தில் ஆரம்பிக்க முடியாதேற்படுமென, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (02) மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்திருந்தார்.