கிம் வெளியே தோன்றிய மறுநாளே குண்டு மழை

வட கொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் 20 நாட்களுக்கு பின்னர் பொது வெளியில் தோன்றிய நிலையில் இன்று (3) அதிகாலை கொரிய எல்லையில் துப்பாக்கி சூட்டு குண்டு மழை பொழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலை எதிர்பாராத தென் கொரியாவும் பதிலுக்கு வட கொரியா மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.