அவசரமாக அடித்துபிடித்து கூடுகிறது ஐதேக

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (3) விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
நாளை அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடக்கவுள்ள கூட்டத்தில் கலந்து கொண்டு பேச வேண்டிய விடயங்களை ஆராய இந்த கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டியதன் அவசியத்தை நாளைய கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏற்கனவே நாடாளுமன்ற ஆயுட்காலம் முடியும்வரை இரண்டு தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து தற்போதுவரை அரசியலில் ஈடுபடும் முன்னாள் எம்பிக்கள் சிலரும் நாளைய கூட்டத்திற்கு அழைக்கப்படவுள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் அவர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்க இவ்வாறு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.