Oktober 7, 2024

பிரித்தானியாவில் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் கொரோனாவால் உயிரிழந்தார்

வவுனியாவை சேர்ந்த பிரித்தானியாவில் வசித்து வந்த லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கபட்டு
உயிரிழந்துள்ளார். இவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன். லண்டனில் ஸ்டோன் பிரிட்ஜ் பார்க் என்ற இடத்தில் (Stonebridge Park) பிரிட்ஜ் பார்க் (Bridge Park Hotel) நடாத்தி வந்தவர்.

கடந்த ஐந்து வாரங்களாக கொரோனா தொற்று நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை (02-05-2020) காலை சிகிற்சைகள் பலனின்றி உயிரிந்துள்ளார்.

தாயகம் சார்ந்த பங்களிப்பை இறுவரை காத்திரமாகச் செய்து வந்தவர். பிரித்தானியாவில் நடைபெறும் மெய்வல்லுநர் போட்டிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் முன்னிற்று உழைத்தவர். ஜொலி ஸ்ரார் என்ற துடுப்பாட்ட கழகத்தையும் நிறுவி நடத்தி வந்தவர்.


2018ம் ஆண்டிற்கான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியில் 16.02.2018 வெள்ளிக்கிழமை அன்று கல்லூரி மைதானத்தில் கல்லூரி அதிபர் திரு.சதா நிமலன் அவர்கள் தலமையில் சிறப்புற இடம்பெற்றது.  இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் இந்துவின் பழைய மாணவன் திரு. லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தந்தையும் யாழ் இந்துக் கல்லூரியன் பழைய மாணவர். அவர் வவுனியாவில் பாடசாலை ஒன்றின் அதிபராக இருந்துள்ளார். அத்துடன் அவரது உறவினர்களும் அதே பாடசாலையில் கல்வி கற்றிருந்தனர்.

பிரதாபன் அவர்களின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.