April 27, 2024

ஐக்கிய இராச்சியத்தை வழிநடத்தும் வெள்ளையர் அல்லாத பிரதமர்!!

ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் முதன்முறையாக, வெள்ளையர் அல்லாத ஒருவர் பிரதமராக நாட்டை வழிநடத்துகிறார்.

பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு ஆதரவு அதிகமாக இருந்தது. கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பிக்கள் 134 க்கும் மேற்பட்டோர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு அளித்தனர். ஆனால், ரிஷி சுனக்கிற்கு எதிராக போட்டியிட திட்டமிட்டு இருந்த போரிஸ் ஜான்சன் மற்றும் பென்னி மொர்டண்ட் போதிய ஆதரவை பெற முடியாததால் போட்டியில் இருந்து விலகினர்.

இதனால், பிரித்தானியாவின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு ஆனார். இதையடுத்து, பிரித்தானியாவில் புதிய ஆட்சியை அமைக்குமாறு ரிஷி சுனக்கிற்கு  மன்னர் 3 ஆம் சர்லஸ் இன்று அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் மூன்றாம் சார்லசை இன்று சந்தித்து பேசினார். அப்போது, அரசர் 3ஆம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக சுனக்கை அறிவித்தார்

அதனை தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

நாட்டின் பொருளாதார இலக்குகளை அடைய,லிஸ் டிரஸ்(முன்னாள் பிரதமர்) வேலை செய்ய தவறவில்லை. அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். ஆனால் சில தவறுகள் நடந்தன

நான் தவறுகளை சரிசெய்ய நியமிக்கப்பட்டேன். நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல, செயலால் ஒன்றிணைப்பேன். அதை செய்ய நாள்தோறும் உழைப்பேன். நம்பிக்கை எனக்கு கிடைத்தது, இன்னும் நம்பிக்கையை சம்பாதிப்பேன்… நம்பிக்கை என்பது நம் அனைவருக்கும் சொந்தமானது, நம்பிக்கை தான் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் என்று அவர் தனது பிரதமரான பிறகு ஆற்றிய உரையில்  உரையாற்றினார்.

42 வயதுயை  ரிஷி சுனக் இந்து மதத்தைச் சேர்ந்தவர். கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக பிரித்தானியாவில் இளைய பிரதமராக பதவி ஏற்ற முதல் நபர்.

இவர் சவுத்தாம்ப்டனில் இந்திய குடியேற்ற பெற்றோருக்கு பிறந்தார். 

நேற்று திங்கட்கிழமை அவர் தனது கன்சர்வேடிவ் கட்சியால் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அவர் லிஸ் ட்ரஸ்ஸிடமிருந்து பொறுப்புக்களை பொறுப்பேற்றார். லிஸ் ட்ரஸ் மிகக் குறுகிய காலம் பணியாற்றிய பிரதம மந்திரி என்ற நம்பமுடியாத சாதனையைப் படைத்தார்.  அவர் பதவியேற்று 44 நாட்கள் பிரதமராக உயர் பதவியில் இருந்தார்.

ஆனால் சுனக்கின் நியமனம் பிரதிநிதித்துவத்திற்கான வெற்றியா? அல்லது பணக்காரர்களுக்கு வரிச்சலுகைகளை உறுதியளிக்குமா? அதே வேளையில் நாட்டை மேலும் பொருளாதார நிலையில் ஸதிரத்தை ஏற்படுத்துமா? மாற்றுமா?  என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கன்சர்வேடிவ் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் இயக்குநரான நயாஸ் காசியின் கூற்றுப்படி, சுனக்கின் உயர்வு பிரிட்டிஷ் இந்தியர்கள் மற்றும் அனைத்து இன சிறுபான்மை சமூகங்களுக்கும் மிகவும் பெருமையான தருணம். ரிஷியின் நியமனம், கன்சர்வேடிவ் கட்சி திறமை மற்றும் தகுதியை எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பதற்கு ஒரு சான்றாகும் என்றார்.  

ஆனால் மற்றவர்களுக்கு, வெஸ்ட்மின்ஸ்டரில் மிக உயர்ந்த பதவியை அடைவது, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தாலும், அது பிரிட்டிஷ் பன்முக கலாச்சாரத்தைப் பற்றி குறைவாகவும், கன்சர்வேடிவ் கட்சியின் பெருகிய முறையில் வலதுசாரிக் கொள்கைகளை உள்ளடக்கியதாகவும் உள்ளது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert