April 26, 2024

விசக் காளானை உண்டதில் ஆப்கான் குழந்தை பலி! மேலும் ஆறு குழுந்தைகள் உயிருக்குப் போராட்டம்

ஆப்கானிஸ்தானிலிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினர் போலந்தில் தங்கவிடப்பட்டுள்ளனர். அங்கிருந்து அகதிகளில் சிறுவர்கள் காட்டுப்குதியில் இருந்து விசக் காளானை உண்டதில் ஐந்து வயதுக் குழந்தை இறந்துள்ளது. மேலும் ஆறு சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிற்சை பெற்று வருகின்றர். இதனை குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.தலைநகர் வார்சாவுக்கு அருகிலுள்ள போட்கோவா லெஸ்னாவில் உள்ள அகதிகள் மையத்தைச் சுற்றியுள்ள காடுகளில் குடும்பம் மிகவும் நச்சுத்தன்மை கொண்ட மரண தொப்பி காளான்களை சேகரித்தது என்பது தெரியவந்துள்ளது.

குழந்தைகளின் பெற்றோர்களும் உளவியல் கவனிப்பில் மருத்துவமனையில் இருந்தனர். மத்திய போலந்தில் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலந்தில் புலம்பெயர்ந்தோர் மையங்களை நடத்தும் வெளிநாட்டினர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாகூப் டட்ஸியாக், குழந்தைகளுக்கு போதுமான அளவு உணவு கொடுக்காததால் காளான்களை சாப்பிட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார்.