Mai 5, 2024

இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா பச்சைக்கொடி

இலங்கையின் நிலைபேறான எரிசக்தி துறையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்திய தனியார் துறைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்த்தன.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை நேற்றுமுன்தினம் சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, இந்தியர்கள் மீது விதிக்கப்பட்ட நுழைவுத்தடைகள் நீக்கப்பட்டதை வரவேற்ற உயர்ஸ்தானிகர், முழுதாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களை இலங்கைக்குள் நுழைய அனுமதித்தமையானது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு மட்டுமன்றி பெரும் பொருளாதார நன்மைகளையும் ஈட்டித் தரும் என்று தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு இலங்கை அரசாங்கம் வழங்கும் முன்னுரிமையை கோடிட்டுக் காட்டிய அமைச்சர், இலங்கையின் நிலைபேறான எரிசக்தி துறையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்திய தனியார் துறைகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் முயற்சியை அங்கீகரித்த உயர்ஸ்தானிகர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், குறிப்பாக சூரிய சக்திக்கான முதலீட்டில் இந்திய முதலீட்டாளர்கள் ஆர்வம்கொண்டிருப்பதாக தெரிவித்தார். இச்சந்திப்பின் போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் கூட்டு ஆணைக்குழு, விமான இணைப்பு, பரஸ்பர வர்த்தக மற்றும் முதலீட்டு முயற்சிகளை மேற்கொள்ளுதல், இலங்கை திரைப்படங்களை டிஜிட்டல் மயப்படுத்தலுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப, பொருளாதாரக் கூட்டுறவிற்கான முயற்சியில் (BIMSTEC) பிராந்திய கூட்டுறவு போன்ற பரஸ்பர நலன்களைக் கொண்ட பல்வேறு துறைகள் குறித்தும் நீண்ட ஆலோசனைகள் நடாத்தப்பட்டன.