தாயகத்தில் கரும்புலிகளிற்கு அஞ்சலி!

இலங்கை படைகளது முடக்க நிலையினை தாண்டி தமிழர் தேசமெங்கும் கரும்புலிகளிற்கு மக்களது மனதார்ந்த அஞ்சலிகள் செலுத்தப்பட்டுள்ளது.

முதல் கரும்புலி தற்கொடையான நெல்லியடியிலும் முதல் தற்கொடையாளனது கிராமமான துன்னாலையிலும் ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களில் சுடரேற்றி அஞ்சலிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பரவலாக வடகிழக்கு தாயகமெங்கும் மக்கள் தத்தமது வீடுகளில் கரும்புலிகளிற்கு இன்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதனிடையே கிளிநொச்சி அக்கராயனை ஆண்ட குறுநில மன்னனுக்கு வணக்கம் செலுத்த முற்பட்டவர்களை இலங்கை காவல்துறை தடுத்துநிறுத்த முற்பட்டுள்ளனர்.

இன்று  கரும்புலி நாள் என்பதால்  நினைவு வணக்கம் செலுத்தவேண்டாம் என்று இலங்கை காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

You may have missed