Mai 10, 2024

துயர் பகிர்தல் விக்ரர்ஞானப்பிரகாசம்

எம் விளைநிலத்து முத்தும் எம் சொத்தும் நீயே
பாஷையூர் கண்ட எங்கள் பெருமைமிகு மகனே
பார்போற்றும் எங்களது அருட்திரு தலைமகனே
நாடுகடந்து சென்றும் அருட்போதனை ஆற்றிய
ஆண்டகையே குருக்களின் முதல்வரே எங்கள்
விக்ரர்ஞானப்பிரகாசம் எனும்பொக்கிசம் நீங்கள்
பண்பானவரும் பணிவானவரும் அன்பானவரும்
பாஷையூர் பெற்றெடுத்த எங்களது மாணிக்கமே
புனிதஅந்தோனியாரின் அசைக்கமுடியா பக்தரே
கத்தோலிக்க குருமார்க்கு குருமுதல்வரானவரே
எட்டமுடியாத இடம்தனை தொட்டமுதல்மகனே
பெருமையோடு நாமும்பெருமிதம் கொள்கிறோம்
மண்ணுக்கும் எமக்கும் பெருமையும் கிடைத்தது
ஆலயத்துக்கு உம்சேவை நிறைவாக கிடைத்தது
இறைபணி சேவைசெய்ய உறவும் தொடர்ந்தன
வாழும் காலத்தில் இறைபணி முதல் சேவையாக
மறைந்தும் மறையாதது உமது பெயர் நிலையாக
உம்மை நாங்கள் உள்ளத்தால் பிரியவில்லையே
இதயத்தால் வாழ்த்தி என்றுமே வணங்குகிறோம்
இறைமகனின் பிள்ளை இறைவனிடம் சென்றாய்
பாஷையூரின் பெருமைதரும் எமது பொக்கிசமே
காலத்தால் அழிக்கமுடியாத எங்கள் அற்ப்புதமே
அன்றும் இன்றும் எமக்கு கிடைத்த முதல்ஆயரே
அருட்தந்தையே விக்ரர் ஞானப்பிரகாசரே உமை
வாழ்த்தி வணங்கி விடைகொடுக்கிறோம்
பிரான்ஸ்வாழ் பாஷையூர் மக்களோடு
புனித அந்தோனியார் முத்தமிழ்க்கலா மன்றம்