டக்ளஸ் தலைமையில் தெற்கில் அபிவிருத்தி:வடக்கில் சுரண்டல்!

தெற்கிற்கு அபிவிருத்தியும் வடக்கிற்கு மாற்றந்தாய் மனப்பான்மை காட்டுவதும் ஆட்சியாளர்களது வழமையாகும்.அதிலும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் சகிதம் மாவெல்ல நங்கூரமிடும் தள நிர்மாண ஆரம்ப பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.

ஆனாலும் தெற்கிற்கான மின்சாரத்தை பெற்றுக்கொள்ள வடக்கிற்கு படை எடுக்க தொடங்கியுள்ளனர் ஆட்சியாளர்கள்.

இதன்படி மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் நாளை மறுதினம் 8 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின்பால் இலங்கை கவனம் செலுத்தியிருப்பது வெற்றியென இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், காற்றாலை மின் உற்பத்தியானது சுற்றாடல் நேயமிக்கதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே வடக்கில் பல இடங்களில் காற்றாலை மின்சக்திக்கென காணிகள் தெற்கினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.