வவுனியாவில் திங்கள் போராட்டம்?

வவுனியாவில் முன்னெடுக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களது போராட்டம் 1200வது நாளை அண்மித்துள்ள நிலையில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தலைவி கா.ஜெயவனிதா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த 1196 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் அவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை பாரிய போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த கா.ஜெயவனிதா எமது போராட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை 1200ஆவது நாளை எட்டுகின்ற நிலையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம் என அவர் தெரிவித்திருந்தார்.