September 11, 2024

கச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமின் முன்பாக போராட்டம்..!!

கச்சாய் வீதியில் அல்லாரை பகுதியில் அமைந்துள்ள 523வது படையணி முகாமில் தனிமைப்படுத்தல் மையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதி குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாவகச்சேரியில் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் மையம் அமைப்பதற்கு எதிராக அந்த பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று ஒன்றுகூடிய மக்கள் இராணுவ முகாமின் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாவகச்சேரி பிரதேசசெயலாளர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம், தனிமைப்படுத்தல் மையம் அமைக்கும் பணியை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் பொதுமக்களை சமரசப்படுத்தினர்.

தனிமைப்படுத்தல் மையம் அமைக்கும் பணியில் இராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.