கொழும்பிலும் கொலை மிரட்டல்?

கொழும்பில் தமிழர்கள் உட்பட 11 இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜராகும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (சிஐடி) நேற்று (23) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கில் கடற்படையைச் சேர்ந்த முன்னாள் தளபதி, முன்னாள் ஊடகப் பேச்சாளர், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என 16 சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.