கீரிமலையில் பொலிஸ் மீது வாள் வெட்டு?

காங்கேசன் துறையின் கீரிமலைப்பகுயில் இலங்கை காவல்துறை மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.குழுமோதலை தடுக்க சென்ற உபபொலிஸ் அதிகாரி  மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவரான முத்துலிங்கம் உதயானந்தன் என்பவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே“கீரிமலைப் பகுதியில் இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் இடம்பெறுவதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அதுதொடர்பில் பொலிஸாரின் வருகையறிந்து வன்முறையில் ஈடுபட்டோர் தப்பி ஓடினர். அவர்கள் மறைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் வீட்டின் படலையைத் திறந்து உள்ளே செல்ல முற்பட்ட போது, உப பொலிஸ் பரிசோதகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனை தடுக்க முற்பட்ட அவருக்கு கையில் வெட்டு விழுந்தது.

சம்பவத்தையடுத்து பொலிஸ் அலுவலகரை வாளால் வெட்டியவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
நேற்று இரவு கீரிமலை இடம்பெற்ற இச்சம்பவத்தை தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகின்றது.