September 23, 2023

கட்டுநாயக்க விமான நிலையத்தை உடன் திறக்க நடவடிக்கை!

கட்டுநாயக்க விமான நிலையத்தை உடன் திறக்க நடவடிக்கை!

கொரோனா பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணியின் ஒப்புதல் அளித்த 12 மணித்தியாலத்திற்குள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்கப்போவதாக அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளுக்கு நாங்கள் காத்திருக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் அனுமதி வழங்கியவுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை முழு நடவடிக்கைகளுக்காக திறக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என அமைச்சர் கூறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்.

சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இலங்கை பாதுகாப்பான நாடாக கருதுகின்றது. கொரோன தொற்றுநோயை இலங்கை கையாண்ட விதத்தில் இந்த வெளிநாட்டு நாடுகள் அனைத்தும் நம்பிக்கை கொண்டுள்ளது.

விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் கொரோனா பரவாமல் பாதுகாப்புடன் சேவைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.