2010 க்கு பின்னர் வந்தவர்களால் தான் கட்சிக்குள் குளறுபடி! சி.வி.கே

தமிழரசுக் கட்சியில் 2010க்கு பின்பு வந்தவர்கள் எல்லாம் பணத்திற்காகவும் பதவிகளுக்காகவும் வந்தவர்களே சீ.வி.கே.சிவஞானம் குற்றம்
சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்துரைக்கும் போது:-

எங்களுடைய கட்சிக்குள் உள்ள பிரச்சினை 2010க்குபின் வந்தவர்கள் தான் குளப்படி இதுக்கு முன்பு கட்சிக்குள் வந்தவனால் அனேகமாக பிரச்சினையில்லை. பின்னுக்கு வந்தவனுக்கெல்லாம் கட்சிக்குள்ள அந்த பதவி வேணும் இந்த பதவி வேணும் மாகாண சபை, பாராளுமன்ற பதவி வேணும் என்று சொல்ற ஆக்கள் இவையள்தான் என்ற சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

2010க்கு பின் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்ட சுமந்திரன், சிறிதரன், சிவமோகன், யோகேஸ்வரன், சிறினேசன், சாள்ஸ், சாந்தி ஆர்னோல்ட், சயந்தன், ரவிகரன், சத்தியலிங்கம் போன்றவர்களால் தான் தமது கட்சிக்குள் குழப்பம் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.