September 11, 2024

கொழும்பில் நிவாரணத்திற்கு சண்டை?

கொழும்பு, மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், காயமடைந்த மேலும் நால்வர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தனியார் ஒருவரால் இன்று பகல் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட போது, அங்கு அதிகளவானவர்கள் ஒன்றுகூடியதால் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.
,தனிடையே
மறு அறிவித்தல் வரை ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டுள்ளது.
தூதரகத்தில் உள்ள பணியாளர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூதரகம் மூடப்பட்டுள்ள நாட்களில் ளடநஅடி.யடிரனாயடிi;அகய.பழஎ.டம மின்னஞ்சலின் ஊடாக அலுவலக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 800 119 119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கை தூதரகத்துடன் தொடர்புகொண்டு சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கை தூதரகம், இந்த விடயங்களை கூறியுள்ளது.