September 9, 2024

முள்ளிவாய்கால் நினைவாக வல்வையில் சிறப்பு வழிபாடு! மரநடுகையும் முன்னெடுப்பு!

வல்வை வாலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்திலும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர்

சி.வி.கே விக்னேஸ்வரன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.

வல்வை வாலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்திலும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி வி கே விக்னேஸ்வரன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இன்று திங்கட்கிழமை மாலை சிவன் ஆலயத்தில் முதலாவதாக நடத்தப்பட்ட பூசை முடிவடைந்த பின்னர் முத்துமாரியம்மன் ஆலயத்திலும் பூசை வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

இவ்வாலயத்தில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டிருந்த விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு பிரதம குருக்கள் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து ஆலயத்தில் இருந்து வெளியேறிய பின்னர் ஊடகம் இன்றைய நிலை சம்பந்தமாக வினாவிய பொழுது அவர் அதனை தெளிவுபடுத்தி பின்னர் மர நடுகையினை மேற்கொண்டு விடைபெற்றுச் சென்றார்.