September 11, 2024

ஜநாவுக்கே சவால் விடும் கோத்தா?

எமது போர் வீரர்களையும், நாட்டையும் தொடர்ந்து குறிவைக்கும் சர்வதேச அமைப்புக்களையோ அல்லது நிறுவனங்களையாே விட்டு விலகத் தயங்கேன் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று (19) மாலை நடைபெற்ற இராணுவ யுத்த வெற்றிவிழாவில் இதனை தெரிவித்துள்ளார். மேலும்,‘சக்தி வாய்ந்த நாடுகளின் தலைவர்கள் கூட தமது போர் வீரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்க எவரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறியுள்ளனர்.
இதுபோன்று, எங்களைப் போன்ற ஒரு சிறிய நாட்டில், இவ்வளவு தியாகங்களை செய்த எம்முடைய போர் வீரர்கள் மீது தேவையற்ற அழுத்தம் கொடுக்கவும் துன்புறுத்தவும் நான் அனுமதிக்க மாட்டேன்.
எந்தவொரு சர்வதேச அமைப்பும் நிறுவனமும் தொடர்ந்து எம் நாட்டையும் எமது போர் வீரர்களையும் குறிவைத்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் முன்வைத்தால் அவற்றில் இருந்து விலகவும் தயங்கேன்’ – என்றார்.