September 26, 2023

கொரோனா நெருக்கடியால் 4 மில்லியின் பெண்கள், குழந்தை திருமண அபாயத்தில்!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நான்கு மில்லியன் சிறுமிகள் குழந்தை திருமணத்திற்கு ஆளாகும் ஆபத்தில் உள்ளனர் என்று உலகளாவிய தொண்டு நிறுவனம் கூறுகிறது.

வறுமை அதிகரித்து வருவதால் பல குடும்பங்கள் தங்கள் மகள்களை நேரத்தோடு  திருமணம் செய்து வைக்க  வழிவகுக்கும். பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாலும், அத்தோடு குழந்தை திருமணத்தை எதிர்த்துப் போராடும் நிறுவனங்கள் சமூக முடக்கத்தினால் இவ்வாறு நடைபெறும் சம்பவங்களை கண்டறிந்து தடுப்பதற்க்கான வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதானாலும்  அபாயங்கள் மேலும் அதிகரிக்கின்றன என்று கூறியுள்ளனர்.