சீன ஜனாதிபதி மற்றும் இலங்கை ஜனாதிபதிக்கு இடையே நேற்று தொலைபேசி உரையாடல்!

சீன ஜனாதிபதி  மற்றும் இலங்கை ஜனாதிபதிக்கு இடையே நேற்று தொலைபேசி உரையாடல்!

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கிடையில் நேற்றிரவு (13) தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது.

சீன அரச ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், அபிவிருத்தி திட்டங்களில் சீனா மீளவும் செயற்பட ஆர்வமாக இருப்பதாக சீன ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கு எதிரான சீனாவின் போராட்டத்திற்கு இலங்கை வழங்கிய தார்மீக ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

உலக மக்களின் பாதுகாப்பிற்காக உலக சுகாதார நிறுவனத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கவும், உலகளாவிய கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் பணியாற்றவும் சீனா ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவின் வலுவான தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை கொரேனா எதிர்ப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயற்படுவதாகவும் பாராட்டியுள்ளார்.