Oktober 8, 2024

கடற்படை ஒத்துழைக்கவில்லையாம்?

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்த தகவல்களை கடற்படை மறைத்தமையால், நோய் பரவலை தடுக்கும் பணிகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடற்படையின் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் பட்சத்தில், அது தொடர்பில் சுகாதாரத் துறைக்கு அறிக்கை அளிக்கப்படுவதில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு சோதனையில் கிடைக்கும் முடிவு, நேர்மறையானதா இல்லையா என்பதை சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிப்பதில்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.உபுல் ரோஹன ராவயவுடனான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
நேர்மறையான முடிவுகள் பொது சுகாதார அதிகாரிகளுக்கு அல்லது அப்பகுதியில் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படுவதில்லை, ஆகவே அது பற்றி எங்களுக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டார்.