Oktober 15, 2024

தொலைபேசியில் பேச்சுவார்த்தை, நெருக்கடியை சமாளிக்க ஜப்பானின் உதவியை நாடியா டிரம்ப்!

கொரோன வைரஸான COVID-19க்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயற்ப்பட  ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர்ஒப்புக்கொண்டுள்ளனர்.

கொரோன வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடக அமெரிக்க விளங்குகிறது , இதற்க்கான காரணமாக சீனாவையே அமெரிக்க குற்றம் சாட்டியவண்ணம் உள்ளது , இந்நிலையில் கோவிட் -19 தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை உருவாக்குவதிலும், அவர்களின் பொருளாதாரங்களை உயர்த்துவதற்கான முயற்சிகளிலும் நெருக்கமாக ஒத்துழைக்க முடிவெடுத்துள்ளனர்.

கொரோன நெருக்கடி நிலைகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் அந்தந்த நாடுகளில் வணிக நிலைமைகள், மற்றும் மீண்டும் திறப்பது தொடர்பாகவும் தொலைபேசி பேச்சுவார்த்தை நடத்தினர்.

„சர்வதேச சமூகம் ஒன்றுபட்டு (தொற்றுநோயை) சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதைப் போலவே இரு தலைவர்களுக்கும் இடையிலான தொலைபேசி பேச்சுவார்த்தை மூலம் ஜப்பான்-அமெரிக்க ஒத்துழைப்பை உறுதிப்படுத்த முடியும் என்பது மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது“ என்று ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிஹைட் சுகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.