September 30, 2023

இலங்கை பிரதமரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர்

இலங்கை பிரதமரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (05) காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கொவிட் -19 உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறிப்பாக பொருளாதார தாக்கங்கள் மற்றும் கூட்டு ஒத்துழைப்பு தொடர்பில் பிரதமருக்கும், அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.