மகனுக்காக வெளிநாட்டில் செட்டிலான நெப்போலியன்! கொரோனா பீதிக்கு மத்தியில் அடித்த அதிர்ஷ்டம்!

என்றும் நீங்காப்புகழை பெற்றோருக்கு அவரின் மூத்தமகன் தேடித்தந்து விட்டாத நடிகர் நெப்போலியன் பெருமிதம் கொண்டுள்ளார்.

நெப்போலியன் குழந்தைகளுக்காக, அதுவும் குறிப்பாக மூத்தமகன் தனுஷ்க்காக அவர்கள் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொண்டு அமெரிக்காவில் டெனசி மாகாணத்தில் நேஷ்வில்லில் செட்டிலாகி விட்டார்.

நேற்று முன்தினம் அவரது மூத்தமகன் தனுஷ் பல்கலைகழகத்தின் BA Animation ( Bachelor of Arts ) என்ற 4 ஆண்டு கால படிப்பை முடித்து பட்டமும் வென்றுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகாலமாக அங்கு வந்து அதிக கவனம் செலுத்தி அவனது உடல்நலத்தையும் மனவலிமையையும் பேணிக்காத்ததினால், அங்கு இருக்கும் Sunset Middle School Ravewood High School போன்ற School-களில் பள்ளிப் படிப்பை முடித்து, Lipscomb University என்ற பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகால பட்டப்படிப்பையும் முடித்து கொரோனா என்ற கொடிய நோயினால் ( Covid19 ) உலகெங்கும் அதிக பாதிப்பு உள்ளதால் காணொலி மூலமாக வீட்டிலிருந்தே பட்டம் பெற்றார் என்பது தான் மகிழ்ச்சியான தகவல்.

நெப்போலியன் மகனான தனுஷ் அனைத்து திறமைகளையும் காட்டி, 1000 கணக்கான படங்களை வித்தியாசமாக, விதவிதமாக வரைந்து, கடினமாக உழைத்து, Muscular Dystrophy என்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட அவரது மிகப்போராட்டமான வாழ்க்கையையும் தாண்டி இறுதியில் சாதித்துக் காட்டிவிட்டார்.

தான் யார் என்று இவ்உலகிற்கு அவரை அடையாளம் காட்டி அவரது வாழ்வை வென்று காட்டிவிட்டார்.

இதேவேளை, என்ன தான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் தன் நம்பிக்கை தான் ஆணி வேர் .

எத்தனயோ குழந்தைகள் குறிப்பாக Muscular Dystrophy போன்ற பிரச்சனை உள்ள குழந்தைகள் நிறையவே கஷ்டப்பட்டு கொண்டு வருகின்றனர்.

அப்படி பட்ட சூழலில் நடிகர் நெப்போலியன் மகன் செய்து இருக்கும் இந்த சாதனை அவர்களது பெற்றோர் அவருக்குக் கொடுத்த தைரியம் எல்லாம் ஒன்று இணைந்து மேலும் மேலும் வெற்றி பெறுவார் என்று வாழ்த்துவோம் என நடிகர் நெப்போலியன் குறிப்பிட்டுள்ளார்.