தீயில் கருகிய வீடு!

மன்னார் – எமில் நகர் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஜிம்றோன் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று (4) மதியம் திடீர் தீ விபத்தில் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
கணவன் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் மனைவி சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென குறித்த வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.
அயலவர்கள் மற்றும் நகர சபையின் தண்ணீர் பவுசரின் உதவியுடன் குறித்த தீ அணைக்கப்பட்ட போதும் வீடு முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
இதனால் மூன்று பிள்ளைகளை கொண்ட நடுத்தர குடும்பதை சேர்ந்த இக்குடும்பம் தற்போது வீடு மாத்திரம் அல்லாமல் பாவனைக்கு என ஆடைகளோ அத்தியாவசிய உணவு பொருட்களோ எந்த ஒரு பொருட்களும் இன்றி என்ன செய்வது என அறியாத நிலையில் உள்ளனர்.