Oktober 18, 2024

மத மோதல்களிற்கு தூண்டப்படும் யாழ்ப்பாணம்?

யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட நவாலிப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்குச் சொந்தமான இடுகாட்டில் நினைவுத் தூபிகள் சில, விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்ற மானிப்பாய் பிரதேச சபைத் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன், குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்ந்தார்.