உலகை அதிர வைக்கும் கடும் சட்டங்களின் பட்டியல் இதோ..!!

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 8 ஆம் திகதி வடகொரிய மக்கள் சிரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினம் முன்னாள் தலைவர் கிம் இல் சுங் இறந்த தினம் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலகில் மர்ம தேசமாக விளங்கிக் கொண்டிருக்கிறது வடகொரியா. அந்நாட்டுக்குள் நடப்பது வெளியுலகிற்கு தெரியாது. அதேவேளை வெளியில் நடக்கும் நிகழ்வுகள் தொடர்பில் வடகொரிய மக்கள் அறிந்து கொள்வது மிகமிகக் குறைவு என்கின்றன தகவல்கள்.

அண்மையில் கூட வடகொரிய அதிபர் இறந்துவிட்டதாகவும், அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரால் எழுந்து நடக்கவே முடியாது என்றும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், 20 நாட்களுக்குப் பின்னர் நேற்றைய தினம் வடகொரிய அதிபர் பொது நிகழ்வில் கலந்து கொண்டதாக அந்நாட்டு அரச ஊடகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

இதற்கிடையில், வடகொரியாவிற்குள் பல விசித்திரமான சட்டங்கள் போடப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த 1980 ஆண்டிலிருந்து வடகொரிய குடிமகன் ஒருவர் குற்றச்செயலில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால், அவரின் மொத்த குடும்பமும் சிறை செல்ல வேண்டும்.
இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது.
மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே உரிய அனுமதியுடன் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர்
பொதுமக்களுக்கு அளிக்கப்படும் உள்ளூர் சேவையில், சுமார் 1,000 முதல் 5,500 இணையதள பக்கங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது
அரசாங்க அனுமதியின்றி எவரும் நாட்டில் இருந்து வெளியேற முடியாது. அது மட்டுமின்றி வடகொரியாவில் வெறும் 3 மில்லியன் மக்கள் மட்டுமே மொபைல்போன் பயன்படுத்துகின்றனர்
வெளிநாடுகளுக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும். 2007-ல் ஒருவருக்கு மரண தண்டனையும் இதனால் விதிக்கப்பட்டது.
வடகொரியாவில் அரசு அதிகாரிகள் மட்டும் சொந்தமாக வாகனம் வைத்துக் கொள்ளலாம், சாலையை பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 8 ஆம் திகதி வடகொரிய மக்கள் சிரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முன்னாள் தலைவர் கிம் இல் சுங் இறந்த தினம் என்பதால் இந்த ஏற்பாடு.
வடகொரியாவில் போதை மருந்து பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

உலகில் பல நாடுகள் இருந்தும், சீனா தவிர்த்து வேறு எந்த நாடுகளுடனும் நெருக்கமான உறவை பேணாத இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உருவான வடகொரியாவில் மொத்தம் 25 மில்லியன் மக்கள் குடியிருந்து வருகின்றனர். வடகொரியா உருவான காலம் தொட்டே, தற்போதைய தலைவரான கிம் ஜாங் வுன் குடும்பமே ஆட்சியில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.