கொரோனா கட்டுப்பாடுகளால் அகதிகள் வருகை பெரும் வீழ்ச்சி!

கொரோனா வைரஸ்COVID-19 காரணமாக ஐரோப்பிய நாடுகளில் உட்பட  கொண்டுவரப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதத்தில் 43% குறைந்துவிட்டன என்று ஐரோப்பிய புகலிடம் ஆதரவு அலுவலகம் (EASO) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் 34,737 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன என்றும், இது பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட பாதி குறைவு.  வைரஸ் ஐரோப்பாவை அடைவதற்கு முன்னர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விண்ணப்பங்கள் 2019 ஆம் ஆண்டின் இதே மாதங்களுடன் ஒப்பிடும்போது 16% அதிகரித்துள்ளன என்றும் EASO குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் விண்ணப்பங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளது.