Mai 18, 2024

தலைவலிக்கு தலையனை மாற்றும் செயற்பாட்டில் அரசாங்கம் உள்ளது! எதிர்க்கட்சித் தலைவர் சாடல்

நாடு இப்போது வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாகவும், இந்த வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் திறன் தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டில் ஒரு வரிசைகளின் யுகம் மற்றும் ரேஷன்களின் சகாப்தம் மீண்டும் உருவாக்கப்பட்டு வருவதாகவும், அரசாங்கம் மக்களை நாளுக்கு நாள் மனச்சோர்வு மற்றும் துரதிஷ்டவசமான விதிக்கு தள்ளிக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

திஸ்ஸமஹாராம, தெபரவெவவில் “ஜன சுவயா” திட்டத்தின் 26ஆவது கட்டத்தில் பங்கேற்ற போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டின் பணக்கார குபேரர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கி அரசாங்க வருவாயை இழந்த வன்னம், அரசாங்கம் தனது பொறுப்பற்ற நடவடிக்கைகளைத் தொடங்கியது.

அரசாங்கத்தின் பொறுப்பற்ற, திறமையற்ற மற்றும் செயற்திறனற்ற வேலைத்திட்டங்களை நாளாந்தம் நிரூபிக்கப்பட்டு வருவருகின்றது.

இவற்றுக்குப் பதிலாக தலைவலிக்கு தலையனை மாற்றுவது மட்டுமே அவ்வப்போது நடந்து வருவருகின்றது

தற்போது அரசாங்கம் ஒரு மூடிய பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. எவ்வாறாயினும் இதற்கு மாறாக அரசாங்கம் பல்பக்க பொருளாதார மாதிரிகளை நிர்வகித்திருக்க வேண்டும். அதனூடாக இந்த நாட்டு மக்களுக்கு நிதி தூண்டுதலையே வழங்க வேண்டும்.

இந் நாட்டின் பொருளாதாரக் கொள்கையில் முழுமையான மாற்றம் தேவை என்றாலும் தற்போதைய அரசாங்கம் கண் மாயைகளைச் செயல்படுத்திக் கொண்டுருப்பதாகவும், அமைச்சர்களை மாற்றுவதற்காக அரசாங்கம் ஒரு இசை நாற்காலி போட்டியை தொடங்கியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.