Mai 4, 2024

என்றும் நானே பிரதமர்:மகிந்த!

 இலங்கையில்  இடைக்கால அரசாங்கமொன்று உருவானாலும் தானே பிரதமர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரை எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் தன்னை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளவில்லை என  அவர் தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைகளில்  ஈடுபட தயார்  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert