April 26, 2024

தடுப்பூசி பெறாத 600 ஊழியர்கள் பணி நீக்கம்,

கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுமார் 600 ஊழியர்களை விமான நிறுவனமான பணி நீக்கம் செய்துள்ளது.

இது தொடர்பாக யுனைடெட் ஏயர்லைன்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஒரு அறிக்கையில்,

593 ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தல் திட்டத்துக்கு இணங்கவில்லை என்பதை நாங்கள் உறுதிபடுத்துகிறோம் இதன் விளைவாக, அவர்களை எமது நிறுவனத்திடமிருந்து பிரிப்பதற்கான செயல்முறையை நாங்கள் தொடங்கியுள்ளோம் என்று கூறியுள்ளது.

எனினும் இந்த செயல்முறையில் மருத்துவம் அல்லது மாதவிடாய் விடுமுறைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான காலக்கெடுவை நிறுவனம் நீட்டித்துள்ளது.

2020 ஜனவரி முதல், சுமார் 692,274 அமெரிக்கர்கள் கொவிட்-19 தொற்று காரணமாக இறந்துள்ளனர் மற்றும் 43.2 மில்லியனுக்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் அமெரிக்கா முழுவதும் பதிவாகியுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.