Mai 2, 2024

பிரதமர் மகிந்த மருத்துவமனையில் அனுமதி? வெளிவந்த உண்மைத் தகவல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானியும் மகிந்தவின் மகனுமான யோஷித்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதமர், சிறந்த உடல்நலத்துடன், தனது பணிகளை வழமை போன்று செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே இவ்வாறான வதந்திகளை தேவையற்றவகையில் பரப்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மை இல்லை என பிரதமரின் செயலாளர் காமினி செனரத் லங்கா தெரிவித்தார்.

பிரதமர் இன்று காலை இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் பகல் உணவும் உட்கொண்டதாக காமினி செனரத் கூறினார்.

அதன்படி பிரதமர் நலமுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.