April 28, 2024

புதிய விண்வெளி நிலையத்தை அமைக்கும் சீனா! உந்துகணையை ஏவியது!

சீனா புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்குவதற்கான தொகுதியை விண்ணுக்கு ஏவியுள்ளது.  இது சீனாவில் விண்வெளி இலட்சியத் திட்டத்தின் அண்மைய செயற்பாடாக இது கருதப்படுகின்றது.வென்சாங் விண்வெளி ஏவுதளத்திலிருந்து மார்ச் – 5 பி உந்துணை ஏவப்பட்டது. 2022 க்குள் புதிய நிலையம் செயல்படும் என்று சீனா நம்புகிறது.  அனுப்பப்பட்ட தியான்ஹே தொகுதியில் விண்வெளி வீரர்களுக்கான வசிப்பிடங்கள் உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சுற்றுப்பாதையில் உள்ள ஒரே ஒரு சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளது. அதிலிருந்து சீனா விலக்கப்பட்டுள்ளது.

விண்வெளி ஆய்வை சீனா மிகவும் தாமதமாகவே தொடங்கியது. சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, சீனா விண்வெளி வீரரை சுற்றுப்பாதையில் அனுப்பியது 2003 ல் தான்.

சீனா முன்னர் இரண்டு விண்வெளி நிலையங்களை சுற்றுப்பாதையில் அனுப்பியுள்ளது. தியாங்காங் -1 மற்றும் தியாங்காங் -2 ஆகியவை சோதனை நிலையங்களாக இருந்தன, விண்வெளி வீரர்களால் ஒப்பீட்டளவில் குறுகிய காலம் மட்டுமே அனுமதிக்கும் ஒற்றை தொகுதிகள் அவை.

புதிதாக உருவாகும் விண்வெளி நிலையம் 66 தொன் எடை கொண்டது. பல தொகுதிகளைக் கொண்ட விண்வெளி நிலையம் 10 ஆண்டுகளுக்கு இயக்கப்பட உள்ளது.

அனுப்பட்ட தியான்ஹே முக்கிய கூறு 16.6 மீ நீளமும் 4.2 மீ அகலமும் கொண்டது. விண்வெளியில் விண்வெளி வீரர்கள் வாழ்வதற்கான அனைத்து வசதிகளையும் தொழிற்நுட்பங்களையும் கொண்ட தங்குமிடங்களைக் கொண்டது.

யூன் மாத்தில் ஷென்ஜோ -12  முதலாாவது காப்ஸ்யூல் செல்லவுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய விண்ளெி நிலையம் 340 முதல் 450 கி.மீ (210-280 மைல்) உயரத்தில் பூமியைச் சுற்றி வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பான ஐ.எஸ்.எஸ். இதில் பங்கேற்க சீனா தடுக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.எஸ் 2024 க்குப் பிறகு ஓய்வு பெற உள்ளது. இது பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள ஒரே விண்வெளி நிலையமாக உள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.