Mai 10, 2024

சீமானிடம் பணியாத பேரம் ! திமுகவிடம் துண்டுபோட்ட கமல்ஹாசன்!

தமிழகத்தில் 20021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சீமானிடம் கமல்ஹாசன் கேட்டுள்ளாராம் இந்த முறை நாம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என ஒரு சிலர் சீமானுக்கு ஆலோசனை வழங்கினராம் அப்படி கூட்டணிக்கு போனால்  மக்கள் நீதி மய்யம்-ஓவைசி அமைக்கலாம். வெறும் சில கட்சிகள் கூட நம்முடன் கூட்டணிக்கு வரும் என்று சொன்னார் அவர்கள்கூறியுள்ளனர்.
ஆனால் சீமானிடம் பேசிவிட்டு இப்போது கமல்ஹாசன் ரஜினி கட்சி ஆரம்பிக்கப்போறார் என்றதும் ரஜினியிடம் தொடர்ந்து ஆதரவு கேட்டு வருகிறார் . ஈகோ பார்க்காமல் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என கமல்ஹாசன் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் அரசியல் வருகையை ஆதரித்த சீமான், ரஜினிகாந்தின் அரசியல் வருகையை ஆரம்பம் தொட்டே எதிர்த்து வருகிறார். நடிகராக ரஜினியை கொண்டாடுகிறோம். ஆனால் தமிழ் மண்ணை தமிழன்தான் ஆள வேண்டுமென்ற விளக்கத்தையும் அவர் முன்னிறுத்துகிறார்.