Mai 10, 2024

பிரித்தானியாவுக்கான பயணத் தடையை விதித்தன ஐரோப்பிய நாடுகள்!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்ந்லாந்திலும் பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.இங்கிலாந்தில் நேற்று லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தில் நான்கு அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானிய நாட்டுக்கான வானூர்த்தி மற்றும் தொடரூந்து சேவைகளை ஐரோப்பிய நாடுகள் சில நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளன.

குறிப்பாக அயர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் அனைத்தும் விமானங்களையும் பயணங்களையும் நிறுத்துகின்றன.

பெல்ஜியம்

இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இங்கிலாந்திலிருந்து வரும் வானூர்தி மற்றும் தொடரூந்து சேவைகளை நிறுத்தி வைப்பதாக பெல்ஜியம் நாட்டின் பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூ தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார்.

அயர்லாந்து

இங்கிலாந்தில் இருந்து வரும் வானூர்திகள் குறைந்தபட்சம் நள்ளிரவு முதல் 48 மணி நேரம் தடை செய்யப்படும் என்றும் பிரித்தானியாவில் உள்ளவர்கள் கடல்வழியாகவும் பயணிக்கக்கூடாது எனவும் சரகுகளுக்கான போக்குவரத்துகள் தொடரும் எனவும் அயர்லாந்து அரசாங்கம் அறிவித்ததுள்ளது.

யேர்மனி

இங்கிலாந்தில் இருந்து வானூர்திகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு தரையிறங்க அனுமதிக்கப்படாது. இருப்பினும் சரக்கு வானூர்திகள் விதிவிலக்கு அளிக்கப்படும் என ஜேர்மனியின் போக்குவரத்து அமைச்சின் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரான்ஸ்

இங்கிலாந்துடனான சரக்குகளை ஏற்றிவரும் பாரவூர்திகள் உள்ளிட்ட அனைத்து பயண இணைப்புகளையும் பிரான்ஸ் நள்ளிரவு முதல் 48 மணி நேரம் நிறுத்தி வைத்துள்ளது என அறிவித்துள்ளது.

பல்கேரியா 

இன்று நள்ளிரவு முதல் இங்கிலாந்துக்கான வானூர்தி சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.

ஆனால் பல நாடுகளில் குறுகிய கால நடவடிக்கைகளைப் போலன்றி, அதன் தடை ஜனவரி 31 வரை நீடிக்கிறது.