Mai 11, 2024

கொரொனா தடுப்பூசியைப் போடவுள்ள எலிசபெத் மகாராணியார்

 

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தும் அவரது கணவர் இளவரசர் பிரிப்பும் கொரோனா தடுப்பூசியைப் போடவுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.இத்தகவலை பிரித்தானிய முன்னணி நாளேடுகள் வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள அமொிக்க நிறுவனங்களான ஃபைசர், பயோஎன்டெக் தயாரித்துள்ள தடுப்பூசிகளை இவர்கள் போடவுள்ளனர்.

குறிப்பாக பிரித்தானியாவில் மக்களிடையே தடுப்பூசி தொடர்பில் மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கும் வகையில் இவர்கள் தடுப்பூசியை போடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

80 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள், சுகாதார ஊழியர்கள், பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோருக்குத் தடுப்பு மருந்து வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

முதலில் பொது மருத்துவமனைகளுக்கும் பின்னர் தனியார் மருத்துவமனைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

தடுப்பூசிகள் இந்தவாரம் முதல் போடப்படவுள்ளன.  40 மில்லியன் தடுப்பூசிகளை வாங்கியுள்ளன பிரித்தானி 20 மில்லியன் பேருக்கு இருதடவைகள் என்ற அடிப்படையில் தடுப்பூசிகளைப் போடத் தீர்மானித்துள்ளது.