Mai 10, 2024

யாழ் மாவட்டத்திலேயே 17243 குடும்பங்களை சேர்ந்த 57513 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.!

யாழ் மாவட்டத்திலேயே 17243 குடும்பங்களை சேர்ந்த 57513 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பலர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் குறிப்பாக இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றை விடவும் கூரை விரிப்புகள், நிலவரி ப்புகள் மற்றும் ஏனைய உணவுப் பொருட்களை வழங்குவதற்கு பிரதேச செயலர்களால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் சிறு தொழில் முயற்சியில் ஈடுபட்டு வந்த 574 தொழில் முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அத்துடன் தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம், சுகாதாரத்துறையினர் ஆகியோரும் இவர்களுக்கான உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இயங்கி வருகின்றனர்.

மேலும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளரினால் சுமார் 10 மில்லியன் ரூபாய் தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டார்.