தனிபான்களை அங்கீகரிக்கவில்லை – பொறிஸ் ஜோன்சன்
தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் நுழையும்போது ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தின் தாயகமாக மாறுவதை யாரும் விரும்பவில்லை என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
ஆப்கானிஸ்தானின் நிலைமை மிகவும் கடினமானதாகத் தொடர்கிறது. நிலைமையை விவாதிக்க இங்கிலாந்து பாராளுமன்றம் புதன்கிழமை திரும்ப அழைக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் மாணவர்களுக்கான இங்கிலாந்து உதவித்தொகை இடைநிறுத்தப்பட்டது.
ஆப்கானில் எங்கள் குடிமக்கள் மற்றும் 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் முயற்சிக்கு உதவிய அனைவருக்கும் முடிந்தவரை அவர்களை அங்கிருந்து வெளியேற்ற உதவுவது எங்களது முன்னுரிமையாகும். காபூலில் தங்கியிருக்கும் பிரிட்டிஷ் தூதர் வேலை செய்கிறார் என்றார்.
தலிபான்களை அங்கீகரிக்கவில்லை என்பதை முன்கூட்டியே உறுதி செய்ய விரும்புவதாக பிரதமர் கூறினார்.
நாங்கள் இப்போது கையாள்வது காபூலில் ஒரு புதிய ஆட்சியின் வருகையாகும்.அது எப்படிப்பட்ட ஆட்சி என்று எங்களுக்கு இன்னும் சரியாகத் தெரியாது என்றார்.