April 26, 2024

கண்டனம் மேல் கண்டனம்!

திருகோணமலை கோணேஸ்வரம் பகுதியை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின அமர்வு இன்றைய தினம் பிரதேசசபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வழமையான சம்பிரதாயங்களுடன் சபை ஆரம்பமான நிலையில் சபையின் அமர்வில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.

இன்றைய சபை அமர்வின்போது திருகோணமலையின் திருக்ணேஸ்வரர் ஆலய பகுதியினை பெரும்பான்மை சமூகத்தினால் சூறையாட முன்னெடுக்கும் செயற்பாடுகளை கண்டித்தும் அதனை தடுத்து நிறுத்துமாறும் கோரும் பிரேரணை அனைத்து கட்சி ஆதரவுடனும் தவிசாளரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது திருகோணமலையின் திருக்ணேஸ்வரர் ஆலய பகுதியினை அபகரிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் தமது கருத்துகளை முன்வைத்ததுடன் அனைத்து உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்கு அமைவாக அனைவரின் ஆதரவுடனும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அதனை தொடர்ந்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் செயற்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.

அத்துடன் இதன்போது செயற்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துமுரண்பாடுகளும் ஏற்பட்டதுடன் பல்வேறு விடயங்கள் குறித்தும்ஆராயப்பட்டது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert