Mai 20, 2024

தெற்கிற்கும் கிழக்கிற்கும் உறைக்கிறது.

வடக்கை தாண்டி ஊடக அடக்குமுறை தெற்கு மற்றும் கிழக்கில் பரவ தொடங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த அறிவித்தலைத் தொடர்ந்து அருண பத்திரிகையின் பணிப்பாளர், பிரதம ஆசிரியர் மஹிந்த இலேபெரும சி.ஐ.டி. விசாரணைக்கு சென்று திரும்பியுள்ளார்.

இந்திய உர வகைகளுக்கு வழங்குவதற்காகத் தனிப்பட்ட கணக்கில் 29 கோடி ரூபாய்  வைப்பு – ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர தலையீடு” என்ற தலைப்பில், “சதி அக அருண” (அருண – வார இறுதி) பத்திரிகையில் வெளியிடப்பட்ட    செய்தி தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கிய  உத்தரவில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அம்பாறை அட்டாளைச்சேனையை சேர்ந்த முஸ்லிம் பகுதிநேர ஊடகவியலாளரும் பிபிசி தமிழ்சேவையின் நிருபருமான மப்ரூக் இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைமையகத்தில் நவம்பர் 8 திங்களன்று கொழும்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று வவுனியாவை சேர்ந்த தமிழ் ஊடகவியலாளரான நவரத்னம் கபில்நாத் ஒக்டோபர் 26 பி.ப.12.00க்கு வவுனியாவிலுள்ள இலங்கை பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினால் உள்ளூர் உதவிக்குழுவொன்றை குறித்த விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.