Mai 13, 2024

பட்டத்து இளவரசர் மீண்டும் முன்னுக்கு!

மீண்டும் கோத்தபாய ஜனாதிபதி கதிரையில் அமர்வதென்பது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அவசர அவசரமாக பட்டத்து இளவரசர் நாமல் ராஜபக்ஸ களமிறக்கப்பட்டுவருகின்றார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கோத்தபாய  நம்பிக்கையிழந்துள்ள நிலையில் பஸில் ராஜபக்சவை களமிறக்க திட்டமிடப்பட்டது.

எனினும் தற்போது செல்லாக்காசாக்கப்பட்டுள்ள மகிந்த இதனை ஏற்றுக்கொள்ளாத நிலையில் குடும்ப மோதல் வலுத்ததையடுத்து பஸில் அவசர அவசரமாக அமெரிக்க புறப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தனது வெளிப்பயணங்களை தவிர்த்துவரும் கோத்தபாய சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் இரண்டாவது தொகுதி “சைனோபாம்” தடுப்பூசிகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் தொடர்புகள் ஏதுமற்ற நாமல் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச, சீன அரசாங்கத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பெறுபேறாக இரண்டாவது தடுப்பூசிகள் தொகுதி இலங்கைக்கு அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றுள்ளது. அரசாங்கம் கொள்வனவு செய்வதற்காக கோரியுள்ள மேலும் 2 மில்லியன் தடுப்பூசிகளை இன்னுமொரு மாதத்திற்குள் வழங்கவும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இலங்கை அரசு போதிய திட்டமிடலின்றி முன் கூட்டியே மருந்தினை பெற்றுக்கொள்ள முற்படவில்லையென்பதும் அம்பலமாகியுள்ளது.