März 24, 2025

ஒன்றாக இணைவோம்!

புலரும் பொழுதே
புலரும் பொழுதே
தமிழ் ஈழம் புலரும்
நாள் வருமா ….

உலகம் முழுதும்
நாங்கள் நின்றே
உரிமை கேட்டு
பார்க்கின்றோம்
உயர்த்தி குரல்கள்
ஒலிக்க நாங்கள்
உரிமை கேட்டு
கதறுகிறோம்
முடிவும் இல்லை
விடுவும் இல்லை
என்னினும் நாங்கள்
சோர வில்லை

தமிழர் வீரம்
தரணி பேசும்
தடைகளை
உடைப்போம்
எழுந்துவா
தரணித் தமிழர்
இணைத்தால் போடும்
தமிழ் ஈழம் மலரும்
இணைந்துவா
இணைவோம் கரங்கள்
இனியேன் தயங்கள்
எழுவோம் புலரும் தமிழீழம்
விடிவின் பாதை தெரியும் தூரம்
இனியும் இங்கே அதிகமிலை

ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
கருவான திகதி 01.08.2021 உருவான நேரம் காலை12.20 மணி