Mai 20, 2024

மன்னார் துயருள் முடங்கியது!

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு வடகிழக்கு தமிழர் தாயகத்திலிருந்து திரண்டு வந்து தேசம் அஞ்சலித்துக்கொண்டிருக்கின்றது.

குறிப்பாக மதங்கள் தாண்டி பொத்துவில் முதல் பொலிகண்டி பேரியக்க தலைவர்கள் திரண்டு வந்து அஞ்சலித்துள்ளனர்.

இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக இன்றைய தினம் திங்கட்கிழமை (5)  மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு   துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

வீதிகள் வீடுகள் எங்கும் கறுப்பு மற்றும் வெள்ளை  நிற கொடிகள் பறக்க விடப்பட்டு ஆயருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

வடக்கு கிழக்கு மாத்திரமன்றி இலங்கை முழுவதும் உள்ள பொதுமக்கள் அரச அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் மதத் தலைவர்கள் என இலட்சக்கணக்கான மக்கள் இணைந்து இன்றைய தினம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் உள்ள ஆயரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை(4) மாலை 3 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்திற்கு அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் இறுதி நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.