Mai 19, 2024

மட்டக்களப்பில் நில ஆக்கிரமிப்பு:களத்தில் சுமா அணி!

மட்டக்களப்பின் எல்லை கிராமமான கெவிலியாமடு பகுதியில் இடம்பெறும் பெரும்பான்மையினரின் அத்துமீறிய குடியேற்றத்துக்கு ஆரம்பமாக மரமுந்திரி பயிர்ச் செய்கை எனும் பெயரில் மேய்ச்சல் தரை காணி பல 100 ஏக்கர்கள் அபகரிக்கப்பட்டுவருகிறது.

கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் ஆக்கிரமித்து சிங்கள பெரும்பான்மைப் பொது மக்களால் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டதுடன், 2015ம் ஆண்டின் பின்னர் வன இலாக அதிகாரிகளினால் இவை தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

ஏனிம் மீண்டும் தற்போது சிவில் பாதுகாப்புப் பிரிவினரால் இப்பிரதேசத்தில் மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர்களான சாணக்கியன்,எம்.ஏ சுமந்திரன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா, மண்முனை தென்னெருவில் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர், மண்முனை தென்மேற்குப் பிரதேசசபைத் தவிசாளர், மண்முனை மேற்குப் பிரதேசசபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர், போரதீவுப் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் உட்பட மட்டக்களப்பின் வாலிபர் முன்னணி தலைவர் என பலரும் நேற்று அப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.