April 28, 2024

பல கோடி ரூபாய் ஏலத்திற்கு செல்லும் உலகில் மிகப்பெரிதான நீல வைரக்கல்

உலகின் மிகப் பெரிய நீல வைரக்கல்லை ஏலத்தில் விடவிருப்பதாக சோதபிஸ் நிறுவனம் கூறியுள்ளது.

15.1 கேரட் எடை கொண்ட டி பீர்ஸ் கல்லினன் வகை நீல வைரக்கல் 48 மில்லியன் டொலருக்கு மேல் விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வைரங்களிலேயே அரிய வகை வைரமான நீல வைரக்கல் ரூ 359 கோடிக்கு ஏலத்திற்கு வருகின்றது.

வைரம் 2011ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

15 கேரட்டுக்கும் அதிகமான எடை கொண்ட நீல வைரக்கல் முதல்முறையாக ஏலத்தில் இடம்பெறுவதாகக் கூறப்பட்டது.

ஹொங்கொங்கில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் வைரக்கல் விற்கப்படும்.

இம்மாதத் தொடக்கத்தில் 555.55 கேரட் கறுப்பு வைரக்கல் ஏலத்தில் விற்கப்பட்டதுடன்,அதுவே ஏலத்தில் விற்பனையான மிகப் பெரிய வைரக்கல் என்றும் கருதப்படுகின்றது.

இந்த வைரம் மிகவும் அரிதிலும் அரிய வகை வைரமாக பார்க்கப்படுகிறது. De Beers Cullinan Blue என அழைக்கப்படும் இந்த வைரம் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னாப்ரிக்காவில் உள்ள கல்லினன் மைன் என்ற இடத்தில் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert