Mai 2, 2024

பிரித்தானிய, இலங்கை வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு…

பிரித்தானிய, இலங்கை வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு...

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் Liz Truss மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் (G.L.Peiris) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது மனித உரிமைகள் குறித்து எதுவும் கூறப்படவில்லை என்பது அதிர்ச்சியைத் தருகின்றதாக பிரித்தானிய தொழில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வெஸ்ட் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் டுவிட்டரில் இட்டுள்ள பதிவொன்றில், பிரித்தானியா தலைமையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளது.