Mai 3, 2024

15 வருடம் கடந்தும் நீதி இல்லை!

ஈபிடிபி ஆசீர்வாதத்துடன் தீவகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட வணபிதா ஜிம் பிறவுண் அடிகளார் குடு;ம்பத்திற்கு 15 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிலையே காணப்படுகின்றது.

வுணபிதா ஜிம் பிரவுன் அடிகளார் மற்றும் உதவியாளர் விமலதாஸ் யாழ்ப்பாணம் அல்லைப்பிடியில் காணாமல் போயிருந்ததாக சந்தேகிக்கப்படுகின்றது.அவர்கள் கடைசியாக கடற்படை சோதனைச் சாவடியில் காணப்பட்டதாக அப்போது தககவல்கள் வெளியாகியிருந்தது.

இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு உதவ கடற்படை கட்டுப்பாட்டு கிராமத்திற்குள் சென்றிருந்த போது ஈபிடிபி மற்றும் இராணுவ கூட்டினில் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

இதை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணையம் போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் மற்றும் இறந்ததாக கூறப்படும் சடலத்தை கண்டுபிடிக்க முடியாததாலும்; விசாரணைகளை மேற்கொள்ள முடியவில்லை என்று கூறி விடயத்தை கைவிட்டிருந்தது. காணாமல் போவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அல்லைப்பிட்டி கத்தோலிக்க தேவாலயத்தில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதற்கு 3 மாதங்களுக்கு முன்பு அல்லைப்பிட்டி கிராமத்தில் 4 மாத கைக்குழந்தை மற்றும் 4 வயது குழந்தை உட்பட 9 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இலங்கை இராணுவம்,கடற்படை மற்றும் ஈபிடிபி கூட்டில் கொலைகள் அரங்கேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.